Homeஇலங்கைஇலங்கை பல்கலைக்கழக மாணவர்களுக்கான புதிய திட்டம்!

இலங்கை பல்கலைக்கழக மாணவர்களுக்கான புதிய திட்டம்!

Published on

இலங்கை பல்கலைக்கழக மாணவர்களிடம் உறுதிமொழி சான்றிதழைப் பெற்று பல்கலைக்கழக மாணவர்களைச் சேர்க்கும் புதிய திட்டம் தொடங்கப்படும் என உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழக சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்க மாட்டோம் என்றும் பல்கலைக்கழக வளாகத்தில் கலவரத்தை ஏற்படுத்த மாட்டோம் என்றும் சான்றிதழில் கையொப்பம் பெறவுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

உயர்தரத்தில் சித்தியடைந்த பின்னர் பல்கலைக்கழகத்திற்குள் நுழைவதற்கான அர்ப்பணிப்பு மற்றும் உரிமையின் பொறுப்பு குறித்து மாணவர்களுக்கு விளக்கமளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இது ஒரு சுமூக உடன்படிக்கை என்றும், ஒப்பந்தத்தை மீறும் மாணவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அவர்களின் மாணவர் சேர்க்கை ரத்து செய்யப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

இதேவேளை, பல்கலைக்கழகத்திற்குள் நுழையும் மாணவர் ஒருவருக்கு ஆண்டுக்கு 8 இலட்சம் ரூபாவை அரசாங்கம் செலவிடுவதாகவும், அதன்படி 4 வருட கல்வி கற்று பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறும் மாணவர்களுக்காக அரசாங்கம் 32 இலட்சம் ரூபா பாரிய தொகையை 4 வருடங்கள் செலவிடுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Latest articles

இலங்கையில் இப்படியொரு திருடன்! வியப்பில் நாட்டு மக்கள்

இலங்கையில் திருடன் ஒருவனின் செயற்பாடு குறித்து நாட்டு மக்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.கொழும்பில் இருந்து மாத்தறை நோக்கி பயணிக்கும் ரயிலில்...

தனியார் வகுப்பிற்கு சென்று திரும்பிய 14 வயது மாணவி துஸ்பிரயோகம் – இளைஞன் தலைமறைவு!

தனியார் வகுப்பில் கலந்து கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த 14 வயது சிறுமிக்கு இளைஞர் ஒருவர் பாலியல் தொல்லை...

சர்ச்சையில் சிக்கிய யாழ்.மாநகரசபை ஆணையாளர்!

யாழ்.மாநகரசபை ஆணையாளர் பெண் உத்தியோகத்தர் ஒருவருடன் தொலைபேசியில் பேசியபோது பயன்படுத்திய வார்த்தை பிரயோகங்கள் தொடர்பாக விசாரணைகள் இடம்பெறலாம் என...

திருகோணமலையில் கஞ்சா செடிகளை வளர்த்த நபர் கைது!

கஞ்சா செடிகளை வளர்த்து வந்த சந்தேக நபரொருவரை திருகோணமலை- நிலாவளி பொலிஸார் கைது செய்துள்ளனர்.திருகோணமலை- பாலையூற்று முருகன் கோயில்...

More like this