இலங்கை தமிழர்கள் குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இலங்கை தமிழர்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை அனுப்புவதற்கு விரைவில் உரிய வசதியை செய்து தருமாறும், யாழ்ப்பாணம் சிறையில் உள்ள மீனவர்களை விரைவில் விடுதலை செய்யுமாறு கோரியும் கடிதம் எழுதியுள்ளார்.
தூத்துக்குடியில் இருந்து காய்கறி, மருந்துகளை கொழும்புக்கு அனுப்ப தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளது. இலங்கை தமிழர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை அனுப்ப உரிய வசதி செய்துதர வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.