செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கைஇலங்கை குறித்து பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் கருத்து!

இலங்கை குறித்து பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் கருத்து!

Published on

spot_img
spot_img

நாடு கடந்த ஏப்ரல் மாதம் 12 ஆம் திகதியில் இருந்து உத்தியோகபூர்வமாக வங்குரோத்து அடைந்து விட்டது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

மே தினத்தை முன்னிட்டு ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார். நாடு வங்குரோத்து அடைந்துள்ள நிலைமையில், வெளிநாட்டு முதலீடுகள், வெளிநாடுகளுடன் மேற்கொள்ளும் கொடுக்கல், வாங்கல்கள், வெளிநாட்டு வர்த்தகம் என்பன நின்று போயுள்ளன.

வங்கி கட்டமைப்பு மிகவும் ஆபத்தான நிலைமையை நோக்கி சென்றுக்கொண்டிருக்கின்றது. நிதிக் கட்டமைப்பு வெடித்து சிதறி வருகிறது.

இதன் காரணமாக சில நாட்களுக்கு அனைத்து அபிவிருத்தித் திட்டங்களையும் நிறுத்தும் அறிவிப்பை அரசாங்கம் வெளியிட நேரிட்டது. இவற்றின் மூலம் நாட்டின் அபிவிருத்தி முற்றாக ஸ்தம்பித்து போயுள்ளதை காண முடிகிறது.

குறிப்பாக தனியார் துறையின் 26 லட்சம் வேலை வாய்ப்புகள் பாரதூரமான ஆபத்துக்கு உள்ளாகி உள்ளது. சுற்றுலாத்துறைக்கு மேலதிகமாக தொழிற்சாலைகளும் தற்போது மூடப்பட்டு வருகின்றன.

நாட்டிற்குள் இயங்கி வந்த முக்கியமான தொழிற்சாலைகள், ஆடை உற்பத்தி துறை என்பன வேறு நாடுகளை நோக்கி கொண்டு செல்லப்படுகின்றன. அதேபோல் அரச சேவையும் படிப்படியாக பாரதூரமான நெருக்கடியை நோக்கி செல்ல உள்ளது எனவும் சம்பிக்க ரணவக்க கூறியுள்ளார்.

Latest articles

பிரசார மேடை இடிந்து வீழ்ந்ததில் 9 பேர் உயிரிழப்பு : பலர் படுகாயம் 

மெக்சிகோவின் நியூவோ லியோன் பகுதியில் தேர்தல் பிரசாரத்தின் போது, மேடையின் ஒருபகுதி இடிந்து வீழ்ந்ததில் 9 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில்...

தேசிய டெங்கு தடுப்பு வாரம் பிரகடனம்…..

தேசிய டெங்கு தடுப்பு வாரம் 26ஆம் திகதி முதல் ஜூன் 01ஆம் திகதி வரை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. மழையுடன் நாடளாவிய ரீதியில்...

ரயிலுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் உயிரிழப்பு…..

காலி, புஸ்ஸ, பிந்தலிய சந்தியில் உள்ள பாதுகாப்பு கடவையில் மோட்டார் சைக்கிள் ஒன்று ரயிலுடன் மோதி இடம்பெற்ற கோர...

சுகாதார தொழிற்சங்கள் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…..

நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் எதிர்வரும் 28ஆம் திகதி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. உத்தியோகபூர்வ...

More like this