உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளுக்காக அமெரிக்கா செல்ல தயாராகியுள்ள இலங்கை கிரிக்கெட் குழாமிலுள்ள இருவரின் அமெரிக்க விசா மறுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் இருபதுக்கு இருபது உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ளன.
இந்த நிலையில், அமெரிக்க விசாவிற்காக இலங்கை கிரிக்கெட் அணி அண்மையில் கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்திற்கு சென்றிருந்தது.
இதன்போது, இலங்கைக்கான அமெரிக்க தூதுவர், இலங்கை கிரிக்கெட் வீரர்களுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டார்.
இந்த நிலையில், இலங்கை அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் இருவரின் அமெரிக்காவிற்கான விசா மறுக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
கிரிக்கெட் வீரர் ஒருவர் மற்றும் இலங்கை அணியுடன் பயணிக்கும் உதவியாளர் ஒருவர் ஆகியோரின் விசாவே இவ்வாறு நிராகரிக்கப்பட்டுள்ளது.விசா மறுக்கப்பட்டமைக்கான காரணம் இதுவரை தெரிய வரவில்லை.