இலங்கையில் உள்ள வெளிநாட்டு நிறுவனங்கள் இலங்கையில் உள்ள தங்களது தங்களது அலுவலகங்களை மூட உள்ளதாக சர்வதேச ஊடங்கள் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி இலங்கையில் உள்ள ஜப்பான் தாய்சே மற்றும் மிட்சுபிஷி போன்ற நிறுவனங்கள் தங்களது கிளைகளை மூட உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி குறித்த தீர்மானங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய நாட்டில் உள்ள மிட்சுபிஷி நிறுவனத்தின் அலுவலகம் எதிர்வரும் மார்ச் மாதம் அளவில் மூடப்படவுள்ளது தாய்சே நிறுவனத்தினால் தற்போது நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்கள் அயல் நாடுகளின் பிரதிநிதிகளால் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடியால் இலங்கையின் பொருளாதாரம் அதளபாதாளத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.