இலங்கையில் 76 வருடங்களின் பின் புதிய வகை பாம்பு இனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.உலர் வலயத்துக்குட்பட்ட கிரித்தல பிரதேசத்தில் இந்த புதிய வகை பாம்பு இனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஊர்வன தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்ட நிரத்த நெத்து விக்கிரமசிங்க, துலா ன் ஆர். விதானபத்திரன, மகேஷ் சி. டி சில்வா, கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர் கமானி எச். தென்னகோன், பேராசிரியர் சமீர ஆர். சமரகோன் மற்றும் ஊர்வன நிபுணர் மெண்டிஸ் விக்கிரமசிங்க ஆகியோர் நீண்ட கால ஆராய்ச்சியின் பின்னர் இந்த இனத்தை கண்டுபிடித்துள்ளனர்.
கடந்த 76 வருடங்களுக்கு முன்னர் எட்வர்ட் டேலர் என்பவரால் இலங்கையில் புதிய இனப் பாம்பு கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.