இலங்கையின் வடபகுதியில் அமைந்துள்ள யாழ்ப்பாண மாவட்டத்தில் டெல்ப்ட் தீவு, நயனதீவு மற்றும் அனலதீவு ஆகிய இடங்களில் 3 புதிய மின் உற்பத்தி நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன.
இந்த மறுசுழற்சி மின் உற்பத்தி நிலையங்கள் இந்தியாவின் மானிய உதவியுடன் அமைக்கப்படுகின்றன.. இதன்போது, புதிய மின் நிலையங்களை அமைப்பதற்காக இந்தியாவைச் சேர்ந்த தனியார் நிறுவனமொன்றுக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.
நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் Hyprit மறுசுழற்சி மின் உற்பத்தி நிலையங்களை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தம் U Solar Clean Energy Solutions (Pvt) Ltd நிறுவனத்திற்கு வழங்கப்பட்டதாக ஊடகத்துறை அமைச்சர் திரு.பந்துல குணவர்தன தெரிவித்தார்.