குருநாகல் கனேவத்த மகுல்வெவ கிராமத்தைச் சேர்ந்த இருவர் எலிக்காய்ச்சல் காரணமாக கடந்த 09 ஆம் திகதி உயிரிழந்துள்ளனர்.
38 மற்றும் 39 வயதுடைய குறித்த நபர்கள் அப்பகுதியில் உள்ள கிரிந்திவெல்மட குளத்தில் நீராடியபோது தொற்று ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
குருநாகல் கனேவத்த மகுல்வெவ கிராமத்தைச் சேர்ந்த இருவர் எலிக்காய்ச்சல் காரணமாக கடந்த 09 ஆம் திகதி உயிரிழந்துள்ளனர்.
38 மற்றும் 39 வயதுடைய குறித்த நபர்கள் அப்பகுதியில் உள்ள கிரிந்திவெல்மட குளத்தில் நீராடியபோது தொற்று ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.இதேபோல் எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 12 பேர் குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக நீர்மட்டம் குறைவாக இருக்கும் ஏரிகளுக்கு மீன்பிடிப்பதற்கும் குளிப்பதற்கும் மக்கள் வருவதால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் காணப்படுவதாக சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
எனவே குறைந்த நீர் உள்ள ஏரிகளில் இருந்து நீர் அருந்துவதை தடுக்குமாறும், நீச்சல், மீன்பிடித்தல் உள்ளிட்ட செயற்பாடுகளில் ஈடுபட வேண்டாம் எனவும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.