கண்டி நகரத்தில் மனித பாவனைக்கு பொருந்தாத உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் கடை ஒன்று சுகாதார பரிசோதகர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளது.
வெளிநாட்டு இனிப்பு பண்டங்களை விற்பனை செய்யும் வர்த்தக நிலையமொன்றே இவ்வாறு சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
குறித்த வர்த்தக நிலையத்தில் உள்ள இனிப்பு பண்டங்களில் காலாவதி திகதி மற்றும் உள்ளடக்கப்பட்ட பொருட்கள் குறித்தான விபரங்கள் உரிய முறையில் குறிப்பிடப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இவற்றில் பெரும்பாலான பொருட்களில் காலாவதி திகதி நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு இனிப்பு பொருட்களை விற்பனை செய்யும் இது போன்ற வர்த்தக நிலையங்களில் சலுகை முறையில் ஏதேனும் வழங்கப்பட்டால் அவை குறித்து விசேட கவனம் செலுத்துமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.