நானுஓயா, மஹாஎலிய பிரதேசத்தில், கோழியொன்று வித்தியாசமான முறையில் முட்டை ஒன்றை இட்டுள்ளது.
இந்த கோழியை சில வருடங்களாக உரிமையாளர் கிருஷாந்தன் வளர்த்து வரும் நிலையில், தொடர்ந்து சிறந்த முறையில் முட்டைகளை கொடுத்து வந்துள்ளது.
இந்நிலையில், திடிரென நேற்றைய தினம் ‘யு’ வடிவிலான முட்டையை இட்டுள்ளதால் உரிமையாளர் வியப்படைந்துள்ளார்.
மேலும், இந்த வினோத முட்டையை பார்ப்பதற்கு அப்பகுதி மக்கள் செல்வதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கோழிகளுக்கு ஏற்படும் மரபணு மாற்றமே இவ்வாறான முட்டைகள் இடுவதற்கு காரணம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், இவ்வாறான முட்டைகள் உண்பதற்கு உகந்ததல்ல எனவும், மீள கோழிக்குஞ்சுகள் அடைகாக்கச் செய்யும் நடவடிக்கைகளுக்கும் உகந்ததல்ல எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறான மு்டடைகளில் மஞ்சட்கருவும் இருக்காது எனவும் அறியமுடிகின்றது.