புத்தாண்டு காலத்தை முன்னிட்டு முந்திரிக்கான கேள்வி அதிகரித்துள்ளதாக முந்திரி கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
தற்போது முந்திரிக்கு அதிக கேள்வி நிலவுவதால் தேவைக்கேற்ப அதன் கொள்ளளவை வழங்க முடியாத நிலை இருப்பதாக முந்திரி கூட்டுத்தாபனம் மேலும் தெரிவித்துள்ளது.
இந்நாட்களில் உள்ளூராட்சி சபைகளுக்கு உட்பட்ட விற்பனை நிலையங்களுக்கு நாள் ஒன்றுக்கு ஒரு மெட்ரிக் தொன் முந்திரி தேவை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் தனியார் விற்பனை நிலையங்களில் ஒரு கிலோ முந்திரி 4000 – 5000 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் முந்திரி கூட்டுத்தாபனத்தால் ஒரு கிலோ முந்திரி 3000 முதல் 3500 ரூபாய் வரை விற்கப்படுகிறது என தெரிவிக்கப்படுகிறது.மேலும், சில பகுதிகளில் உடைந்த முந்திரி துகள்களை, பல வகையான பசைகளை பயன்படுத்தி ஒட்டப்பட்டு, முழு முந்திரியாக விற்பனை செய்வதால், உயர்ரக முந்திரி விற்பனை வீழ்ச்சி அடைவதாக முந்திரி கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.