தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் (NCPI) கணக்கிட்டுள்ள மாதாந்த பணவீக்க விகித அறிக்கையின்படி, இலங்கையின் பணவீக்க விகிதம் முதல் தடவையாக 20 சதவீதத்தை கடந்துள்ளது.
சர்வதேச பணவீக்கத்தில் இலங்கை 20% ஐத் தாண்டிய போதிலும் இலங்கையின் பணவீக்கச் சுட்டெண் 20% ஐத் தாண்டியுள்ளதாக தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் (NCPI) தெரிவித்திருப்பது இதுவே முதல் தடவையாகும்.
அதன்படி, இலங்கையில் பெப்ரவரியில் 17.5% ஆக இருந்த பணவீக்க விகிதம் ஏப்ரல் மாதத்தில் 21.5% ஆக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.