இலங்கையில் முதன்முறையாக அசெம்பிள் செய்யப்பட்ட Hyundai Grand i10, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கொழும்பு சிட்டி சென்டரில் இன்று (10) முதல் முறையாக சந்தைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
இலங்கையின் அபான்ஸ் ஆட்டோ நிறுவனமும் கொரியாவின் ஹூண்டாய் மோட்டார் நிறுவனமும் இணைந்து சீதுவாவில் உள்ள அதிநவீன தொழிற்சாலையில் இந்த காரின் அசெம்பிளிங் செய்யப்படுகிறது.
வாகனங்களை ஒன்று சேர்ப்பது மற்றும் வாகன உதிரிபாகங்களை உள்நாட்டில் உற்பத்தி செய்யும் துறையில் இந்த நிகழ்வு ஒரு பாரிய படியாகும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
இந்த காரை அறிமுகம் செய்யும் நிகழ்வில் பெருந்தோட்ட அமைச்சர் ரமேஷ் பத்திரன, இலங்கைக்கான கொரிய தூதுவர் சந்துஷ் வூன்ஜின் ஜியோங், முதலீட்டு சபையின் தலைவர் தினேஷ் வீரக்கொடி, அபான்ஸ் குழும நிறுவனங்களின் பணிப்பாளர்கள் சரோஷி துபாஷ் மற்றும் ருசி பெஸ்டோன்ஜி ஆகியோர் கலந்துகொண்டனர்.