தங்கையிடம் தங்க நகைகளை அபகரித்த இளைஞர் ஒருவர் பொலிஸாரின் துரத்தலின் போது வீட்டின் மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று கம்பளை பகுதியில் இருந்து பதிவாகியுள்ளது. உயிரிழந்தவர் போதைக்கு அடிமையானவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நபரால் திருடப்பட்ட தங்க நகைகளின் பெறுமதி சுமார் 11 இலட்சம் ரூபா என தெரியவந்துள்ளது.
பிரேதப் பரிசோதனையின் பின்னர் சடலம் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.