நேற்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் பெட்ரோல் விலை அதிகரித்துள்ளது.
இதன்படி, லங்கா பெட்ரோல் 92 ஒக்டேனின் விலை 370 ரூபாவிலிருந்து 30 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய , புதிய விலை லீட்டருக்கு ரூபா 400 எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் விலைத்திருத்தத்துடன், லங்கா ஐஓசியும் நேற்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் ஒக்டன் 92 பெட்ரோலின் விலை 30 ரூபாவினால் உயர்த்தப்பட்டுள்ளது.எனினும், மற்ற ரக பெட்ரோல் மற்றும் டீசல் போன்றவற்றின் விலைகளில் மாற்றம் மேற்கொள்ளப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.