இலங்கையில் நிபா வைரஸால் பாதிக்கப்பட்ட இரண்டு குழந்தைகள் அடையாளம் காணப்பட்டதாக கூறுவது தவறான தகவல் என வைத்தியர் ஜி. விஜேசூரிய தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட குழந்தைகள் இருவரும் தற்போது லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்பட்டுள்ளது.
அத்துடன் , இந்த வைரஸ் தொற்றுக்கு உள்ளானதாக சந்தேகிக்கப்படும் எவரும் இந்நாட்டில் பதிவாகவில்லை என வைத்தியர் தெரிவித்துள்ளார்.இதன் காரணமாக தற்போதுள்ள நோய்களுக்கு சிகிச்சை பெற மக்கள் பயப்பட வேண்டாம் எனவும் வைத்தியர் மேலும் தெரிவித்துள்ளார்.