சோளத்தை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ள நிலையில், பயிரிடப்பட்ட சோளத்தின் இருப்புக்களை உடனடியாக விடுவிக்குமாறு விவசாய அமைச்சு விவசாயிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
நாட்டில் சோளத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமையினால் மீண்டும் சோளத்தை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
சோளத்தின் விலை அதிகரிக்கலாம் என எதிர்பார்த்து சில விவசாயிகள் சோளத்தை கையிருப்பில் வைத்திருந்தாலும், சோளத்தை இறக்குமதி செய்தால் விலை குறைய வாய்ப்புள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
எனவே, கையிருப்பில் உள்ள சோளத்தை விற்பனை செய்யுமாறு விவசாய அமைச்சு விவசாயிகளை கேட்டுக்கொண்டுள்ளது.