இலங்கையில் அடையாளம் காணப்பட்ட சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை ஆபத்தான அதிகரிப்பு காணப்படுவதாக சிறுநீரகவியல் நிபுணர் டாக்டர் அனுர ஹேவகீகன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (மார்ச் 09) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே கலாநிதி ஹேவகீகன இதனைத் தெரிவித்தார்.
மேலும், விவசாய பிரதேசங்களில் பதிவாகும் சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு தற்போது காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.