மொனராகலை – படல்கும்புரை பிரதேசத்தில் குழு மோதலில் குடும்பஸ்தர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
கடந்த (19-07-2023) இடம்பெற்ற இச் சம்பவத்தில் 3 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இரண்டு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற இந்த மோதலில் குறித்த குடும்பஸ்தர் கத்தியால் கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.இச்சம்பவத்தில் படல்கும்புரை பிரதேசத்தைச் சேர்ந்த 47 வயதுடைய அஷங்க பண்டார என்பவரே கொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த குடும்பஸ்தர் இராணுவத்தில் கடமையாற்றியவர் என்றும், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் அவர் பணிநீக்கம் செய்யப்பட்டிருந்தார் என்றும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இக் கொலை தொடர்பில் 4 பேரை பொலிஸார் கைது செய்துள்ள நிலையில், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.