இலங்கையில் இந்திய ரூபாவை பயன்படுத்துவதற்கு ஆலோசனை மேற்கொண்டு வருவதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி கூறியுள்ளார்.இந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழுடன் நேற்றைய தினம் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இது குறித்து கூறியுள்ளார்.
இதன் மூலம் இந்தியர்கள் நேரடியாக இலங்கையில் இந்திய நாணயத்தை பயன்படுத்த கூடியதாக இருக்கும் என்றும் அத்தோடு இலங்கையர்கள் முழுமையாக வேறு நாணயத்தை நம்பி இருக்காமல் செயற்ப்பட முடியும் எனவும் கூறியுள்ளார்.