பண்டிகைக் காலங்களில் போலி நாணயத்தாள்கள் புழக்கத்தில் விடப்படுவது குறித்து கடைகளுக்குச் செல்லும் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பண்டிகைக் காலங்களில் போலி நாணயத்தாள்களை சந்தையில் சேர்க்க மோசடியாளர்கள் முயற்சிப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.
பொலிஸ் நிலையங்களுக்கு மோசடியாளர்கள் தொடர்பில் தொடர் முறைப்பாடுகள் கிடைப்பதனால் மிகவும் அவதானமாக இருக்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
பணமாற்றும் போதும் மீதிப்பணம் பெறும் போது மிகவும் அவதானத்துடன் அதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பெண்கள் தனியாக செல்லும் போது அதிக நகைகள் மற்றும் பெறுமதியான பொருட்களுடன் செல்வதனை தவிர்ப்பது நல்லது.
பேருந்துகளில் பணப் பைகளை வெட்டி எடுக்கும் போக்கு அதிகரித்துள்ளமையினால் எப்போதும் எச்சரிக்கையாக இருக்க முயற்சிக்கவும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.