Homeஇலங்கைஇலங்கையிலுள்ள அலவத்துகொட பள்ளிவாசலுக்கு வெடிகுண்டு மிரட்டல் பலப்படுத்தப்படும் பாதுகாப்பு

இலங்கையிலுள்ள அலவத்துகொட பள்ளிவாசலுக்கு வெடிகுண்டு மிரட்டல் பலப்படுத்தப்படும் பாதுகாப்பு

Published on

மத்திய மாகாணத்தில் உள்ள அலவத்துகொட பள்ளிவாசலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டமை தொடர்பாக புலனாய்வுத் தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை என பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அலவத்துகொட பொலிஸ் நிலையத்திற்கு சுமார் 2.45 மணியளவில் அழைப்பு கிடைத்தது என்றும் இதனை அடுத்து விரைவான நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி அறிவுறுத்தியுள்ளார்.

இந்த அச்சுறுத்தல் தொடர்பான தகவல் கிடைப்பதற்கு முன் உளவுத்துறை தகவல்கள் எதுவும் பெறப்படவில்லை என அலவத்துகொட பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி கூறியுள்ளார்.

இருந்தும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதேவேளை வெடிகுண்டு மிரட்டல் குறித்து உளவுத்துறைக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை என பாதுகாப்பு அமைச்சின் ஊடக பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.

எவ்வாறாயினும், இந்த சம்பவம் 2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் குண்டுவெடிப்புகளுக்குப் பின்னர் இலங்கை எதிர்கொள்ளும் தற்போதைய பாதுகாப்பு கவலைகளை எழுப்பியுள்ளது.

தற்போது வரை, பள்ளிவாசலுக்கு அருகாமையில் வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதாகவோ அல்லது அச்சுறுத்தல் தொடர்பாக கைது செய்யப்பட்டதாகவோ எந்த தகவலும் இல்லை.

மேலும் பொதுமக்கள் விழிப்புடன் இருக்கவும், சந்தேகத்திற்கிடமான செயல்கள் ஏதேனும் இருந்தால் உடனடியாக பொலிஸாருக்கு தெரிவிக்குமாறும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

அத்துடன், தமது கட்டளையை மீறி பயணிக்கும் வாகனங்கள் மீது துப்பாக்கி சூடு நடத்துவதற்கும் பொலிஸாருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இதையடுத்து, அக்குரணை பகுதி மக்கள் மத்தியில் சற்று பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது.

Latest articles

ஒடிசாவில் 51 மணி நேரத்திற்கு பின்னர் மீண்டும் ரயில் சேவை ஆரம்பம்

ஒடிசாவில்  ரயில் விபத்து இடம்பெற்று 51 மணி நேரங்களின் பின்னர்  சீரமைப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் மீண்டும்  ரயில்...

இணையத்தின் ஊடாக பணமோசடியில் ஈடுபட்ட நபர் – பெருந்தொகை சிம் அட்டைகள் மீட்பு

இணையம் ஊடாக பல்வேறு நபர்களின் வங்கிக் கணக்குகளில் இருந்து பணத்தை தனது வங்கிக்கு வரவு வைத்ததாக கூறப்படும் நபர்...

இன்று முதல் குறைவடையும் பாணின் விலை

பாணின் விலை இரு இறாத்தல் பாணின் (450g) விலை 10 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் நடைமுறைக்கு வரும்...

இலங்கையர்களுக்கு வெளியான எச்சரிக்கை; அழகு நிலையத்தில் இடம்பெற்ற மோசடி

கொழும்பு, ராஜகிரிய பகுதியில் புற்று நோயாளர்களுக்கு பயன்படுத்தப்படும் ஊசிகளை சட்டவிரோதமாகப் பயன்படுத்தும் மற்றுமொரு அழகு நிலையம் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. சினிமா நடிகைகள்...

More like this