அவர் ஏப்ரல் 7 ஆம் திகதி காலமானார் இறக்கும் போது அவருக்கு வயது 97.குழந்தை நல மருத்துவராக இருந்த அவர், குழந்தைகள் நல மருத்துவர் சங்கத்தின் தலைவராக 25 ஆண்டுகள் பணியாற்றினார். அவர் 1991 இல் ஓய்வு பெறும் வரை அந்தப் பதவியில் இருந்தார்.
பணிபுரியும் தாய்மார்களுக்கு மூன்று மாதங்கள் மகப்பேறு விடுப்பு வழங்கப்பட வேண்டும் என்ற பரிந்துரையை அரசாங்கம் நடைமுறைப்படுத்தும் வரை பணியாற்றிய மருத்துவரான இவர், இலங்கையில் இருந்து போலியோவை ஒழிப்பதற்கு சிறந்த சேவையையும் செய்தார்.
அவர் நவம்பர் 23, 1925 இல் மொரட்டுவையில் பிறந்தார். மொரட்டுவை இளவரசி வேல்ஸ் கல்லூரியில் கல்வி கற்று கொழும்பு பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடத்தில் இணைந்து மருத்துவப் பட்டம் பெற்றார். பின்னர் லண்டனில் மருத்துவம் படித்து முனைவர் பட்டம் பெற்று இலங்கை திரும்பினார்.
யாழ்ப்பாணம் உட்பட நாட்டின் பல மாகாணங்களில் உள்ள மருத்துவமனைகளில் பணிபுரிந்தார். அதன் பின்னர் கொழும்பு மருத்துவ பீடத்தில் இணைந்தார்.