இலங்கையில் பொருளாதார ஸ்திரப்படுத்தும் திட்டத்திற்கு கனேடிய அரசாங்கம் தொடர்ந்து ஆதரவளிக்கும் என இலங்கைக்கான கனடா உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஷ் தெரிவித்துள்ளார்.
பதில் நிதியமைச்சர் ஷெஹான் சேமசிங்கவுடன் நேற்று புதன்கிழமை நிதியமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே உயர்ஸ்தானிகர் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார்.
பொருளாதார மீட்சித் திட்டத்திற்காக இலங்கை மேற்கொண்டுள்ள சீர்திருத்தங்களுக்கு கனேடிய உயர்ஸ்தானிகர் தனது பாராட்டுக்களை தெரிவித்ததாக அமைச்சர் கூறினார்.
இக்கலந்துரையாடலின் போது அமைச்சர் சேமசிங்க, பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கு இலங்கை பிரஜைகளின் பின்னடைவு மற்றும் உறுதிப்பாடு ஆகியவற்றை இலங்கை மதிப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையில் அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு கனடா அரசாங்கம் தொடர்ந்து ஆதரவளிக்கும் என்றும் உயர்ஸ்தானிகர் மேலும் குறிப்பிடுகையில், விவசாய நவீனமயமாக்கல் மற்றும் SME களுக்கு உதவுவதில் அரசாங்கத்தின் முன்னுரிமை குறித்து நாங்கள் கலந்துரையாடினோம்.