இத்தாலியில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு பெற்றுக்கொடுக்கும் நோக்கில் இலங்கைத் தொழிலாளர்களுக்கு புலம்பெயர்ந்த தொழிலாளர் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தங்களை வழங்குவதற்கு வெளிவிவகார அமைச்சு கவனம் செலுத்தி வருகின்றது.
அதற்கமைய இத்தாலியில் இருந்து இலங்கைக்கு அதிகளவிலான சுற்றுலா பயணிகளுக்கு தேவையான ஒத்துழைப்பை வழங்குவதற்கு இத்தாலி இணக்கம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.
மேலும் இலங்கையின் பொருளாராத வளர்ச்சிக்கு சுற்றுலா துறை ஒரு முக்கியமான அம்சம் என்று அதற்கு தம்மால் இயன்ற அளவு உதவ முடியும் என இத்தாலிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.