தலங்கம – வடரவம் வீதியில் உள்ள ஜெயந்திபுர இரண்டு மாடி கட்டிடத்தின் குளியலறையில் ஏற்பட்ட தீ விபத்தில் வெளிநாட்டு பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வெளிநாட்டில் இருந்து குளிரூட்டிகளை இறக்குமதி செய்யும் நிறுவனமொன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தலங்கம பொலிஸார் தெரிவித்தனர்.
கோட்டே மாநகரசபையின் தீயணைப்புத் திணைக்கள அதிகாரிகள் தீயைக் கட்டுப்படுத்த வந்ததையடுத்து தற்போது தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.