பிரபல இந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகர் ஹரிஹரன் ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் விமான பணியாளர்களுடன் எடுத்துகொண்ட புகைபடங்கள் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமா மட்டுமன்றி பிற மொழி பாடகராகவும் பாடகர் ஹரிஹரன் உள்ளார். இவரது பாடல்கள் பல ரசிகர்களின் மனங்களை கொள்ளை கொண்டவை. தமிழ் சினிமாவில் 90களில் வந்த எத்தனையோ பாடல்கள் இப்போதும் மக்களால் கொண்டாடப்படுகிறது.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளில் அதிக பாடல்கள் பாடியுள்ள இவர் மலையாளம், கன்னடம், மராத்தி, சிங்களா மற்றும் போஜ்பூரி என 15,000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியிருக்கிறார்.
மேலும் ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் விமான பணியாளர்களுடன் ஹரிஹரன், மற்றும் விஜய் டிவி பிரபலங்களான மா.கா.ப.ஆன்ந்த், சிவாங்கி ஆகியோரும் எடுத்துகொண்ட புகைபடங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.