Homeஇலங்கைஇலங்கைக்கு வந்த மர்ம விமானம்- இந்தியாவுக்கு ஆபத்து!

இலங்கைக்கு வந்த மர்ம விமானம்- இந்தியாவுக்கு ஆபத்து!

Published on

இந்தியாவுக்கு தெரியாமல் அமெரிக்க படைத்துறை அதிகாரிகள் பலத்த பாதுகாப்புடன் இலங்கையில் தரையிறங்கிய விடயம் இந்தியாவுக்கு ஆபத்தாக மாறியிருக்கிறது.

பெப்ரவரி 14ஆம் திகதி அமெரிக்க வான்படைக்குச் சொந்தமான சீ – 17 குளோப் மாஸ்டர் ரக இரு விமானங்கள் 29 அமெரிக்க உயர் அதிகாரிகளுடன், பெருமளவு ஆயுதங்கள் மற்றும் பலவிதமான படைத்துறை உபகரணங்களுடன் இலங்கையில் தரையிறங்கியது.ஆனால், அந்த ஆயுதங்கள் இலங்கையில் இறக்கப்பட்டனவா என்ற தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

விமானத்தில் இலங்கை வந்திருந்த உயர் மட்ட பிரமுகர்களுள் அமெரிக்காவின் உளவு நிறுவனமான சிஐஏ யின் தலைவர் வில்லியம் பேன்ஸ் மற்றும் இந்தோ – பசுபிக் இராணுவ செயற்பாடுகளின் கொள்கை வகுப்பு அதிகாரியான ஹெனடியா றோயல் ஆகியோரும் உள்ளடங்குவர்.

அமெரிக்க விமானப்படையின் வான்கலங்களில் பலத்த பாதுகாப்புடன் ரகசியமாக அவர்கள் இலங்கைக்குள் நுழைந்ததன் பின்னணியில் ஏதோ மிகப் பெரிய நகர்வு ஒன்று இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

அமெரிக்க உயர்மட்ட அதிகாரிகளின் இலங்கை வருகை பற்றியோ, அவர்கள் இலங்கையில் மேற்கொண்ட சந்திப்புகளின் விபரமும் இந்தியாவுக்கு வழங்கப்படவில்லை என்கின்ற செய்தி தான் இந்த விவகாரத்தில் அதிகம் பரபரப்புக்கு உள்ளாகி வருகின்ற ஒன்றாக இருக்கிறது.

அமெரிக்க அதிகாரிகளின் வருகை பற்றிய தகவல்களை சேகரிப்பதில் இந்திய தூதரக அதிகாரிகள் வெளிப்படுத்திய ஆர்வத்தை பார்க்கின்ற போது இந்தியாவுக்குத் தெரியாமல் அமெரிக்க அதிகாரிகளின் இலங்கை வருகை இருந்துள்ளதான சந்தேகம் வெளிப்பட்டுள்ளது.

Latest articles

இலங்கையர்களுக்கு வெளியான எச்சரிக்கை; அழகு நிலையத்தில் இடம்பெற்ற மோசடி

கொழும்பு, ராஜகிரிய பகுதியில் புற்று நோயாளர்களுக்கு பயன்படுத்தப்படும் ஊசிகளை சட்டவிரோதமாகப் பயன்படுத்தும் மற்றுமொரு அழகு நிலையம் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. சினிமா நடிகைகள்...

ஆலய தேர்த் திருவிழாவில் பூசாரி உயிரிழப்பு

களுத்துறையில் ஆலய தேர்த் திருவிழாவின் போது தீ விபத்தில் சிக்கி பூசாரி ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம்...

தன்னை தானே சுட்டு விபரீத முடிவெடுத்த விமானப்படை வீரர்!

பம்பலப்பிட்டி பொன்சேகா பிளேஸ் பகுதியில் விமானப்படை வீரர் ஒருவர் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். திருகோணமலை...

பாடசாலை மைதானம் ஒன்றில் திடீரென தரையிறங்கிய உலங்கு வானூர்தியால் பரபரப்பு

அனுராதபுரம் கலென்பிந்துனுவெவ - பலுகொல்லாகம பாடசாலையின் விளையாட்டு மைதானத்தில் நேற்று காலை தனியார் நிறுவனமொன்றுக்கு சொந்தமான உலங்கு வானூர்த்தி...

More like this