இலங்கைக்கு சட்டவிரோதமாக கடத்தப்பட்ட 760 கிலோ பீடி இலைகள் மீட்கப்பட்டுள்ளன.இலங்கைக்கு இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக கேரளா கஞ்சாப் பொதிகளை கடல்மார்க்கமாக கொண்டுவரப்பட்டுள்ளது என பொலிஸ் விஷேட புலனாய்வுப் பிரிவருக்கு கிடைத்த இரகசிய தகவலை பொலிசார் நேற்றைய தினம் (20.02.2023)அன்று தேடுதல் மேற்கொள்ளப்பட்டது.
அதன் போது 19 உரைகளில் அடைக்கப்பட்ட நிலையில் சுமார் 760 கிலோ பீடி இலைகள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அதன் பெருமதி மட்டுமே சுமார் 1.5 கோடி ரூபா எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தேடுதலின் போது யாரும் கைது செய்யப்படவில்லை எனவும் கைப்பற்றப்பட்ட பீடி இலைகளை கற்பிட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளதாக கற்பிட்டி பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.