இலங்கைக்கு கடத்த தயாராக இருந்த 6 லட்சம் போதைப் பொருட்களை தமிழக போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
இலங்கைக்கு அனுப்புவதற்காக ராமநாதபுரம் வேதாளை கிராமம் அருகே கரையோரத்தில் ஒரு படகில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மாத்திரைகள்.
போதைப்பொருளை கடத்த முயன்ற கடத்தல்காரர்களை கண்டுபிடிக்க தமிழக காவல்துறையின் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தேடுதல் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக தமிழக காவல்துறை அறிவித்துள்ளது.
மேலும், கடத்தலை தடுக்க கடலோரப் பகுதிகளில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தேடுதல் வேட்டையை அதிகப்படுத்தியுள்ளதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.