ஜப்பானினால் அமுல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள இலகு ரயில் திட்டத்தை மீள அமுல்படுத்துவது தொடர்பில் இன்று (02) ஜப்பானுடன் கலந்துரையாடவுள்ளதாக போக்குவரத்து அமைச்சின் செயலாளர் திரு.பிரியந்த மாயாதுன்ன தெரிவித்தார்.
இந்த திட்டம் கொழும்பிற்கு மிகவும் முக்கியமானது எனவும், அதனை நடைமுறைப்படுத்துவதற்கு முன்முயற்சி எடுப்பதை தனது முதல் கடமையாக கருதுவதாகவும் திரு.மாயாதுன்ன தெரிவித்தார்.
தமக்கு எந்த அமைச்சு கிடைத்தாலும் தனது பொறுப்பை சரியாக நிறைவேற்றுவேன் என தெரிவித்த அவர், அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்களின் செயலாளராக கடமையாற்றிய காலப்பகுதியில் அதனை செய்துள்ளார். எதிர்கால சந்ததியினருக்காக இந்த நாட்டைக் காப்பாற்றுவதற்காக மேற்கொள்ளும் பல்வேறு முயற்சிகளில் பல்வேறு தடைகள் ஏற்பட்டாலும் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லும் தன்னம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் திரு.மாயாதுன்ன தெரிவித்தார். போக்குவரத்து அமைச்சின் செயலாளராக திரு.பிரியந்த மாயாதுன்ன இன்று (02) பதவியேற்க உள்ளார்.