New Zealand மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான முதலாவது Test போட்டியில் இறுதி பந்தில் New Zealand அணி வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.
5 ஆம் நாளில் 257 ஓட்டங்கள் பெற வேண்டும் என்கிற நிலையில் களமிறங்கிய New Zealand அணி மழை காரணமாக 5 ஆம் நாளில் 53 ஓவர்கள் மாத்திரம் வீசப்படும் என்கிற நிலையில் பரபரப்புக்கு மத்தியில் இறுதி பந்தில் வெற்றி பெற்றுள்ளது.
ஆரம்பத்தில் Williamson மற்றும் Mitchell அதிரடியாக ஆடி ஓட்டங்களைக் குவிந்திருந்தாலும் இறுதி கட்டத்தில் இலங்கை அணி விக்கெட்களை கைப்பற்றி சற்று போட்டியை நெருக்கி இருந்தாலும் இறுதி ஓவரின் இறுதி பந்தில் இலங்கை அணியின் ஒரு Run Out வாய்ப்பு தோல்வியடைய New Zealand அணி 2 விக்கெட்களால் த்ரில் வெற்றி பெற்றது.
இவ் வெற்றியின் மூலம் New Zealand தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இதன் மூலம் India அணி WTC இறுதி போட்டிக்கு தேர்வாகியுள்ளது.