இந்தியா மற்றும் New Zealand அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட T20 தொடரின் இரண்டாவது போட்டி இன்று Lucknow இல் இடம்பெற்றது.
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற New Zealand அணி முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்ததது. அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய New Zealand அணி இந்த சுழல் பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ள முடியாமல் 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட் இழப்பிற்கு வெறும் 99 ஓட்டங்களை மாத்திரமே பெற்று கொண்டது.
பதிலுக்கு 100 ஓட்டங்கள் என்ற இலகுவான இலக்குடன் துடுப்பெடுத்தாடிய இந்திய அணிக்கு New Zealand சுழல் பந்துவீச்சாளர்கள் அதிர்ச்சி கொடுத்தனர். எனினும் இந்திய அணி சீராக ஓட்டங்களைக் குவித்து இறுதி ஓவரில் வெற்றி இலக்கை அடைந்தது. இந்திய அணிக்கு மீண்டும் Suryakumar Yadav துடுப்பாட்டத்தில் நம்பிக்கை அளித்திருந்தார்.
இவ் வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட T20 தொடரை 1-1 என்ற கணக்கில் சமநிலையாக்கியுள்ளது இந்தியா. இரு அணிகளுக்கு இடையிலான 3 ஆவது மற்றும் இறுதி T20 போட்டி Ahmedabad இல் புதன் கிழமை இடம்பெற உள்ளது.