இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளின் முதல் தொகுதி இன்று நாடு பெறப்படும் என இலங்கை அரச வர்த்தக (பொது) கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
அண்மைய நாட்களில் இந்நாட்டு நுகர்வோரை பாதித்த முட்டை தட்டுப்பாட்டைக் குறைக்கும் வகையில் முட்டைகளை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதன்படி, இறக்குமதி செய்யப்பட்ட முட்டையின் முதல் தொகுதியாக 2 மில்லியன் முட்டைகள் இன்று இலங்கைக்கு கொண்டுவரப்பட உள்ளன. சந்தையில் முட்டைகளை விற்பனை செய்ய அனுமதி இல்லை, உணவு உற்பத்தியாளர்களுக்கு மட்டுமே வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இலங்கை அரச வர்த்தக (பொது) கூட்டுத்தாபனத்திற்கு மாத்திரமே முட்டைகளை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.இதேவேளை, முட்டை இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட இறக்குமதி வரி குறைக்கப்பட்டுள்ள போதிலும், அது அரச துறைக்கு மாத்திரமே பொருந்தும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இதன்படி, முட்டை தொடர்பான பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் மற்றும் தெரிவு செய்யப்பட்ட துறைகளுக்கு 30 ரூபாவிற்கு ஒரு முட்டையை வழங்க முடியும் என இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.