சிரியா மற்றும் துருக்கி ஆகிய நாடுகளைச் சேர்ந்த பிரஜைகளுக்கு கனடாவில் வீசா விண்ணப்பங்களின் போது முன்னுரிமை அளிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாரிய நில அதிர்வு காரணமாக பாதிக்கப்பட்ட இரு நாடுகளினதும் பிரஜைகளுக்கு இந்த சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அதேவேளை, தற்காலிகமாக வதிவோர் தங்களது வீசா காலத்தை நீடித்துக்கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வீசா விண்ணப்பங்கள் தொடர்பிலும் இந்த இரு நாட்டுப் பிரஜைகளுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும் என குடிவரவு அமைச்சர் சீன் ப்ரேசர் தெரிவித்துள்ளார்.கடந்த மாதம் சிரியா மற்றும் துருக்கியில் இடம்பெற்ற நில நடுக்கத்தில் 50000 பேர் வரையில் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.