ஹவாவில் இருந்து ஓமந்தே வரையான புகையிரத பாதையை புனரமைக்கும் திட்டத்திற்காக இறக்குமதி செய்யப்பட்ட பல இலட்சம் ரூபா பெறுமதியான இரும்பு திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் புகையிரத திணைக்களத்தின் நான்கு அதிகாரிகளின் சேவையை இடைநிறுத்துவதற்கு போக்குவரத்து அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன நடவடிக்கை எடுத்துள்ளார். .
சம்பந்தப்பட்ட நான்கு அதிகாரிகளும் திட்டத்தில் உயர் பதவியில் இருப்பவர்கள் என்றும், சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகவும் போக்குவரத்து அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இவர்களால் திருடப்பட்டதாக கூறப்படும் இரும்பின் பெறுமதி இதுவரை மதிப்பிடப்படவில்லை எனவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.