யாழ்ப்பாணம் சிங்கள மகா வித்தியாலயப் பாடசாலை கட்டடம் முழுமையாக இராணுவத்தினரிற்கு கைமாற்றப்படுகின்றது.
யாழ்ப்பாணம் கல்வி வலயத்தின் கீழ் உள்ள சிங்கள மகா வித்தியாலயம் நீண்ட காலம் இயங்காத நிலையில் இருந்தபோதும், 1995 ஆம் ஆண்டிற்கு பின்பு படையிர் குடாநாட்டை கைப்பற்றியது முதல் இராணுவ 512ஆவது பிரிகேட் படை முகாமாக செயல்பட்டு வருகின்றது.
இவ்வாறு முகாமாக இயங்கும் பாடசாலைக் கட்டடத்தை பாதுகாப்பு அமைச்சு இராணுவத்தினரிற்கே நிரந்தரமாக கையளிக்குமாறு கோரியதன் பெயரில் சுற்றுலா மற்றும் காணி அமைச்சு இப் பாடசாலையை கையளிக்குமாறு மத்திய கல்வி அமைச்சை எழுத்தில் கோரியுள்ளது.
இவ்வாறு காணி அமைச்சு கல்வி அமைச்சிடம் கோரிய விடயத்தை, மத்திய கல்வி அமைச்சு வடக்கு மாகாண கல்வி அமைச்சிடம் சம்மதத்தை கோரியபோது சிங்கள மகா வித்தியாலய கட்டடத்தை இராணுவத்தினருக்கு வழங்குவதில் ஆட்சேபனை இல்லை என கல்வித் திணைக்களம் எழுத்தில் பதிலளித்துள்ளனர்.
இதன் மூலம் யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் உள்ள சிங்கள மகா வித்தியாலயம் நிரந்தரமாக இராணுவத்தினருக்கு வழங்கப்படவுள்ளது.