யாழ்ப்பாணம் நீர்வேலி பகுதியில் துவிச்சக்கரவண்டியில் ரோந்தில் சென்ற இராணுவத்தினர் மீது மது போதையில் வீதியால் பயணித்த இரு இளைஞர்கள் மோட்டார் சைக்கிளை குறுக்கே விட்டு இடையூறு விளைவித்தனர்.
கோப்பாய் சந்தியில் உள்ள இராணுவ முகாமில் கடமை புரியும் இராணுவத்தினர் மீதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது சம்பவம் தொடர்பில் இடையூறு விளைவித்த பூதர் மடம் மற்றும் நீர்வேலி பகுதியைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டு குறித்த விடயம் தொடர்பில் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.