அமெரிக்காவின் நெவாடா மாகாணத்தில் உள்ள ரெனோ நகரில் நடந்த தேசிய செம்பியன்ஷிப் விமான கண்காட்சியில் நடந்த விமான விபத்தில் இரண்டு விமானிகள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமான கண்காட்சியின் போது தரையிறங்க முற்பட்ட போது இரண்டு விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து தொடர்பில் அந்நாட்டின் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு சபை, பெடரல் விமான சேவை நிர்வாகம் மற்றும் உள்ளுராட்சி அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.