செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கைஇரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழப்பு.....

இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழப்பு…..

Published on

spot_img
spot_img

முல்லைத்தீவு அளம்பில் பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் எதிர் எதிரே மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் மரணமடைந்துள்ளார்.

நேற்று (01.03.2024) இரவு 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது.குறித்த இந்த விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குமுழமுனை பகுதியிலிருந்து அளம்பில் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும் செம்மலையிலிருந்து தண்ணிமுறிப்பு வயல் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும் அளம்பில் சந்திக்கு அருகே சென்று கொண்டிருந்த போது எதிர் எதிரே மோதி விபத்துக்குள்ளானது.

இவ்விபத்தில் இரு மோட்டார் சைக்கிளில் பயணித்த மூவரும் காயமடைந்த நிலையில் முல்லைத்தீவு வைத்தியசாலை விபத்து பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்திருந்தனர்.

மேலதிக சிகிச்சைக்காக யாழ் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த செம்மலையை சேர்ந்த சிங்கராசா யோகராசா (வயது 54) என்பவர் இன்று (02) அதிகாலை மரணமடைந்துள்ளார்.

குமுழமுனை பகுதியிலிருந்து வந்து விபத்தினை ஏற்படுத்தியதாக கூறப்படுபவர்கள் மதுபோதையில் இருந்ததாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்தள்ள நிலையில் விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Latest articles

உயிரிழந்த ஹமாஸ் படைத் தளபதி ….

மேற்கு கரையில் இடம்பெற்ற மோதலில் உள்ளூா் ஹமாஸ் படைத் தளபதி உட்பட 2 பலஸ்தீனா்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள்...

மன்னர் சார்லஸுன் படத்துடன் வெளியாகும் பிரித்தானிய பணம்….

பிரித்தானிய ராணி இரண்டாம் எலிசபெத் மறைந்த பிறகு மூன்றாம் சார்லஸ் அந்நாட்டின் மன்னராக பொறுப்பேற்றார். இதனிடையே மன்னர் சார்லஸுன் படத்துடன்...

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்….

நிகழும் மங்களகரமான குரோதி வருடம் உத்தராயணப் புண்ணிய காலம் இந்த தமிழ் புத்தாண்டு பிறந்துள்ளது. குரோதி வருடத்திற்கான பலன் இந்த ஆண்டு...

இலங்கையை வந்தடைந்த‌ கிரிஸ்டல் செரினிட்டி சொகுசு கப்பல்……

இன்று (13) காலை கிரிஸ்டல் செரினிட்டி என்ற சொகுசு கப்பல் இந்தோனேசியாவிலிருந்து 265 பயணிகள் மற்றும் 480 பணியாளர்களுடன்...

More like this