ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இரண்டு புதிய மாகாண பிரதம செயலக நியமனங்களை வழங்கியுள்ளார்.
இதன்படி, மத்திய மாகாணத்தின் பிரதம செயலாளராக அஜித் பிரேமசிங்கவும், ஊவா மாகாணத்தின் பிரதம செயலாளராக தனயந்தி பரணகமவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இருவருமே இலங்கை நிர்வாக சேவையின் (SLAS) விசேட தர உத்தியோகத்தர்கள் என்பதுடன், பதவியில் இருக்கும் அதிகாரிகளின் ஓய்வுடன் தொடர்புடைய நியமனங்கள் நடைமுறைக்கு வரும் என ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு (PMD) குறிப்பிட்டுள்ளது.