பதுளையில் இரண்டு பிரதேசங்களுக்கு மஞ்சள் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணித்தியாலத்தில் பெய்த கனமழையால் இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கையை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இதன்படி, பதுளையின் ஹல்துமுல்ல மற்றும் ஹப்புத்தளை பகுதிகளுக்கு மஞ்சள் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.