அமலாபால் ஒரு பிரபலமான தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்பட நடிகை ஆவார் . கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான வீரசேகரன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை அமலா பால் .
இருந்தாலும் இவருக்கு இந்த படத்தை விட நல்ல வரவேற்பை பெற்று தந்தது மைனா திரைப்படம் தான் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து தெய்வத்திருமகள் ,வேட்டை ,காதலில் சொதப்புவது எப்படி,தலைவா ,நிமிர்ந்து நில் ,வேலையில்லா பட்டதாரி , பசங்க 2 , அம்மா கணக்கு , ராட்சசன் போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார் . மேலும் நடிகை அமலாபால் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி மொழி படங்களிலும் நடித்திருக்கிறார்.
இதனிடையே பிரபல தமிழ் பட இயக்குனரான ஏஎல் விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டார் நடிகை அமலா பால் . ஆனால் திருமணமான மூன்று வருடங்களிலேயே இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர் . இதன் பிறகு பல வருடமாக தனியாக வாழ்ந்து வந்த,நடிகை அமலா பால் விரைவில் இரண்டாவது திருமணம் செய்து கொள்ளப் போகிறாராம் . அந்த வகையில் தன்னுடைய வருங்கால கணவரின் புகைப்படத்தை தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார் நடிகை அமலா பால்..