கென்யாவில் மதபோகரின் பேச்சை நம்பி பட்டினி கிடந்து பலர் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், மீட்கப்பட்ட சடலங்களின் எண்ணிக்கை 90 ஆக அதிகரித்துள்ளது. ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கென்யாவில் மலிண்டி என்ற கடலோர நகரம் அமைந்து உள்ளது. இதனையொட்டிய ஷகாகோலா வன பகுதியில் சிலரது உடல்கள் புதைந்து கிடக்கின்றன என ரகசிய தகவல் தெரிய வந்து போலீசார் உடனடியாக சம்பவ பகுதிக்கு சென்று உள்ளனர். இதில் குறிப்பிட்ட இடத்தில் இருந்து தோண்ட, தோண்ட உடல்கள் தோண்டி எடுக்கப்பட்டன. இதுதொடர்பாக ஆலயத்தின் பாதிரியாரான பால் மெக்கன்சி என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்தனர்.
அப்போது கடவுளை காண வேண்டும் என்றால் பட்டினி கிடந்து நோன்பு இருக்க வேண்டும் என்று மக்களிடம் கூறியுள்ளார். அவர்களும் அதனை உண்மை என நம்பி பட்டினியாக கிடந்து உள்ளனர். அவர்களில் 90 பேர் உயிரிழந்து விட்டனர்.அவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டது.
அவை உடல் மெலிந்து கிடைக்கும் நிலையில் டி.என்.ஏ. பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. பற்றிய தொடர்பான விசாரணையில் பால் மெக்கன்சி சாப்பிடவோ அல்லது குடிக்கவோ மறுத்து விட்டார். இந்த சம்பவம் கென்யாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனை தொடர்ந்து சர்வதேச கிறிஸ்தவ ஆலயம் இருந்த 800 ஏக்கர் வன பகுதி முழுவதும் சீல் வைத்து மூடப்பட்டு உள்ளது.