இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான 3 ஆவது மற்றும் இறுதி ஒரு நாள் போட்டி இண்டோர் இல் நடைபெற்று வருகிறது.
நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்று பந்து வீச்சை தெரிவுசெய்த நியூசிலாந்து அணிக்கு இந்திய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் தமது அதிரடி ஆட்டத்தின் மூலம் அதிர்ச்சியளித்தனர். ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான அணித்தலைவர் ரோஹித் சர்மா மற்றும் கில் இருவரும் அதிரடியாக சத்தம் விளாசி இந்திய ரசிகர்களை குஷிப்படுத்தினர். எனினும் இரண்டாம் பாதியில் நியூசிலாந்து பந்து வீச்சாளர்கள் சற்று பொறுப்பான பந்துவீச்சை வெளிக்காட்ட இந்திய அணி 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட் இழப்பிற்கு 385 ஓட்டங்களை பெற்று கொண்டது.
துடுப்பாட்டத்தில் ரோஹித் சர்மா 101 ஓட்டங்களையும் கில் 112 ஓட்டங்களையும் ஹர்டிக் பாண்டியா 54 ஓட்டங்களையும் பெற்று கொடுத்தனர். பந்து வீச்சில் Jacob Duffey 3 விக்கெட்களை வீழ்த்தி இருந்தாலும் 10 ஓவர்களில் 100 ஓட்டங்களை விட்டுக்கொடுத்திருந்தார்.
போட்டியில் வெற்றி பெற்று Whitewash ஐ தடுப்பதற்கு 50 ஓவர்களில் 386 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில் நியூசிலாந்து அணி துடுப்பெடுத்தாடி வருகிறது.