சோபகிருது ஆண்டு – ஐப்பசி 14- செவ்வாய்க்கிழமை (31.10.2023)
நடசத்திரம் : கார்த்திகை காலை 6.32 வரை பின்னர் ரோஹணி
திதி : திரிதியை மாலை 11.50 வரை பின்னர் சதுர்த்தி
யோகம் : சித்த – அமிர்த யோகம்
நல்ல நேரம் : காலை 7.45 -8.45/ மாலை 4.45-5.45
செய்வாக்கிழமை – சுப ஓரை விவரங்கள் (காலை 10.30 முதல் 11 வரை, பகல் 12 முதல் 1 வரை 4.30 முதல் 6 வரை, இரவு 7 முதல் 8 வரை )
சுபகரியங்கள் : சிகிச்சை செய்ய, ஆயுதஞ் செய்ய, யந்திரம் ஸ்தாபிக்க சிறந்த நாள்.
தினப்பலன்
மேஷம் : குடும்ப சூழ்நிலைகள் சாதகமாக அமையும். யாரையும் யாருக்கும் சிபாரிசு செய்ய வேண்டாம். உறவினர்கள் உதவி கேட்டு வந்து நிற்பார். தொழில், வியாபாரம் செழிக்கும்.
ரிஷபம் : உங்களால் மற்றவர்கள் பயனடைவர். திட்டமிட்ட காரியம் ஒன்று சிறப்பாக அமையும். எதிரிகள் அடிபணிந்து போவார். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.
மிதுனம் : வெளி நபர்களை நம்பி ஏமாற வேண்டாம். எதிர்பாராத பயணங்கள் ஏற்படும். வாழ்க்கைத்துணையிடம் வாக்குவாதங்கள் குறையும். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார்.
கடகம் : குடும்பத்தில் அமைதியான சூழல் நிலவும். உங்கள் அனுபவ அறிவு வெளிப்படும். பழைய கடனை திருப்பி அடைக்க முடியும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.
சிம்மம் : பொது காரியங்கள் ஆர்வம் கூடும். புது பொருள் சேர்க்கை உண்டாகும். வாகனங்களில் மெதுவாக செல்லவும். தொழில், வியாபாரம் புதிய பாதையில் செல்லும்.
கன்னி : குடும்ப பொருளாதாரம் நிலை உயரும். சிக்கலான விஷயங்களை கூட எளிதில் தீர்க்க முடிக்க முடியும். முக்கிய நபர்களின் சந்திப்பு நிகழும். உத்யோகத்தில் ஆதரவு பெருகும்.
துலாம் : குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பெற்றோர்கள் நலனில் அக்கறைகொள்ளவும். பிரியமானவர்கள் வழியில் காரியம் அனுகூலம் உண்டாகும். தொழில், வியாபாரம் விருத்தியடையும்.
விருச்சிகம் : குடும்பத்தில் விட்டு கொடுத்து போகவும். பொது ஜன தொடர்பு அதிகரிக்கும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும்.
தனுசு : ஆடம்பர செலவுகளை குறைத்து சேமிக்க தொடங்கவும். மனதில் நல்ல எண்ணங்கள் உதிக்கும். இடம் பொருள் ஏவல் அறிந்து செயல்படவும். தொழில், வியாபாரம் சிறக்கும்.
மகரம் : குடும்ப செலவுகளை குறைத்து சேமிக்க பழகவும். மனதில் நல்ல எண்ணங்கள் உதிக்கும். இடம் பொருள் ஏவல் அறிந்து செயல்படவும். தொழில், வியாபாரதில் முன்னேற்றம் உண்டு.
கும்பம் : குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். மனதில் புதிய உற்சாகம் பிறக்கும். திட்டமிட்ட காரியத்தில் திடீர் மாற்றம் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.
மீனம் : குடும்பத்துடன் சென்று நேர்த்தி கடனை செய்யவும். எதிலும் பொறுமையாக கடைப்பிடிப்பது நல்லது. நட்பு வட்டம் விரிவடையும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.