சோபகிருது ஆண்டு – கார்த்திகை 19 – செவ்வாய்கிழமை (05.12.2023)
நட்சத்திரம்: பூரம் காலை 3.51 வரை பின்னர் உத்திரம்
திதி : அஷ்டமி காலை 12.21 வரை பின்னர் நவமி
யோகம் : சித்த – அமிர்த யோகம்
நல்லநேரம் : காலை 7.45 – 8.45 / மாலை 4.45 – 5.45
செவ்வாய்க்கிழமை – சுப ஓரை விவரங்கள்
(காலை 10.30 முதல் 11 வரை, பகல் 12 முதல் 1 வரை 4.30 முதல் 6 வரை, இரவு 7 முதல் 8 வரை
சுபகாரியங்கள் : சிகிச்சை செய்ய, ஆயுதஞ் செய்ய, யந்திரம் ஸ்தாபிக்க சிறந்த நாள்.
மேஷம் :குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். புது பொருள் சேர்க்கை உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே அன்யோன்யம் ஏற்படும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.
ரிஷபம் :நீண்ட நாட்களாக நடக்காமல் இருந்த காரியம் நடக்கும். வீட்டில் சுப செலவுகள் இருக்கும். நண்பர்களிடம் மனம் விட்டு பேசவும். உத்யோகத்தில் வேலை பளு கூடும்.
மிதுனம் :குடும்பத்தில் சிக்கனத்தை கடைப்பிடிக்கும். விமர்சனங்களை கண்டுகொள்ள வேண்டாம். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பர்.
கடகம் :திட்டமிட்ட காரியம் தாமதமின்றி நடக்கும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். கணவன் மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும்.
சிம்மம் :குடும்ப பிரச்சனைகள் அகலும். வெளிவட்டார தொடர்புகள் அதிகரிக்கும். தேவையற்ற நட்பு வட்டாரங்களை குறைப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும்.
கன்னி :மனம் விரும்பிய காரியத்தை செய்ய முடியும். பிரபலங்கள் அறிமுகமாவர். வாகனம் வழியில் சில செலவுகள் இருக்கும். உத்யோகத்தில் நிறைய கற்றுக்கொள்ள முடியும்.
துலாம் :பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். அனாவசிய பயணங்களை புறக்கணிக்கவும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். உத்யோகம் உயர்வு நிலை உண்டு.
விருச்சிகம் :குடும்பத்தில் மனநிம்மதி கிடைக்கும். பொது காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். எதிர்ப்புகள் அடங்கும். உத்யோகத்தில் விரும்பிய இட மாற்றம் உண்டு.
தனுசு :குடும்பத்தில் புது நபர்களின் வருகை இருக்கும். எதிர்பாராத மருத்துவ செலவுகள் வரும். பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடி இருக்கும். தொழில், வியாபாரம் சூடு பிடிக்கும்.
மகரம் :குடும்பத்தின் பேராதரவை பெற முடியும். அடுத்தவருக்கு உதவும் எண்ணம் இருக்கும். கணவன் மனைவிடையே நல்ல ஒற்றுமை நிலவும். உத்யோகத்தில் ஏற்பட்ட தடங்கல் நீங்கும்.
கும்பம் :புத்தி கூர்மையால் எதையும் சாதிக்க முடியும். உடல் உபாதைகள் படிப்படியாக குறையும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. தொழில், வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும்.
மீனம் :குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். உற்றார், உறவினர்கள் எதிராக செயல்பட வாய்ப்புண்டு. கடன் பிரச்சனை ஓரளவு குறையும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.