சோபகிருது ஆண்டு – கார்த்திகை 10 – ஞாயிற்றுக்கிழமை (26.11.2023)
நட்சத்திரம் : பரணி மாலை 2.40 வரை பின்னர் கார்த்திகை
திதி : சதுர்த்தசி மாலை 3.57 வரை பின்னர் பௌர்ணமி
யோகம் : சித்த யோகம்
நல்லநேரம் : காலை 7.45 – 8.45 / மாலை 3.15 – 4.15
ஞாயிற்றுக்கிழமை சுப ஓரை விவரங்கள்
(காலை 7.30 முதல் 10.00 வரை, பகல் 2 முதல் 4.30 வரை, இரவு 9 முதல் 12 வரை)
சுபகாரியங்கள் : மருந்து உண்ண, பேட்டி காண, யாத்திரை செய்ய சிறந்த நாள்
மேஷம் :குடும்பத்தில் குதூகலம் ஏற்படும். பொருளாதார நிலை வெகுவாக உயரும். சாட்சி கையெழுத்து போட வேண்டாம். உத்யோகத்தில் வேலை பளு குறையும்.
ரிஷபம் :குடும்பத்தில் வீண் செலவுகளைத் குறைக்கவும். மனச்சுமை அதிகரிக்கும். புது வீடு மாற்றம் ஏற்படும். தொழில், வியாபாரம் வழக்கம் போல் இருக்கும்.
மிதுனம் :மனதிலும், உடலிலும் புதிய உற்சாகம் பிறக்கும். ஆடம்பரப் பொருள் சேர்க்கை உண்டாகும். விஐபிகளின் அறிமுகம் கிட்டும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.
கடகம் :குடும்பத்துடன் பயணிக்க விருப்பம் ஏற்படும். தள்ளி போன காரியம் விரைவில் முடியும். எதிர்ப்புகள் தானாக அடங்கும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.
சிம்மம் :எதிர்பார்த்த விஷயங்கள் நடக்கும். முடங்கி கிடந்த வேலைகள் அனைத்தும் வேகம் பெரும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் உண்டாகும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.
கன்னி :குடும்பத்தில் உங்கள் கருத்தை ஏற்பர். பொருளாதார சிக்கல் ஏற்பட்டு நீங்கும். வாகன யோகம் உண்டு. தொழில், வியாபாரம் ஏறுமுகமாக இருக்கும்.
துலாம் :பண வரவு ஓரளவு இருக்கும். திட்டமிட்ட காரியம் தாமதமாகும். எதையும் துணிச்சலாக செய்யும் சாமர்த்தியம் இருக்கும். உத்யோகத்தில் பதவி தேடி வரும்.
விருச்சிகம் :குடும்பத்தில் இருந்து வந்த மனகசப்பு நீங்கும். காரிய அனுகூலம் உண்டாகும். வீண் விவாதங்களை தவிர்க்கவும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.
தனுசு :புது நபர்களின் வருகை உற்சாகம் தரும். தேவையில்லாத டென்ஷனை மனதில் வைக்க வேண்டாம். திருமணம் காரியம் கைகூடும். உத்யோக மாற்றம் வரும்.
மகரம் :குடும்ப நிதி நிலைமை சீரடையும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். உறவினர்களுடன் சில விரிசல்கள் வரக்கூடும். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும்.
கும்பம் :யாருடைய கருத்துக்கும் செவி சாய்க்க வேண்டாம். வாக்கு வன்மை கூடும். முக்கிய வேலைகளை அலைந்து திரிந்து முடிக்க வேண்டி வரும். உத்யோகத்தில் கவனம் தேவை.
மீனம் :குடும்பத்தில் ஸ்வாரஸ்யம் அதிகமாகும். வாழ்க்கை தரம் உயரும். அடுத்தவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்கவும். தொழில், வியாபாரத்தில் போட்டி இருக்கும்.