சோபகிருது ஆண்டு – கார்த்திகை 9 – சனிக்கிழமை (25.11.2023)
நடசத்திரம் : அஸ்வினி மாலை 3.19 வரை பின்னர் பரணி
திதி : திரயோதசி மாலை 5.13 வரை பின்னர் சதுர்த்தசி
யோகம் : சித்த யோகம்
நல்ல நேரம் : காலை 7.45-8.45/ மாலை 4.45-5.45
சனிக்கிழமை – சுப ஓரை விவரங்கள் (காலை 7 முதல் 7 1/2,10 1/2 முதல் 12 வரை, பகல் 12 முதல் 1 வரை,5 முதல் 6 வரை, இரவு 6 முதல் 7 1/2 வரை,9 முதல் 10 வரை )
சுபகாரியங்கள் : ஆயுதம் பழக, யாத்திரை போக,சுபம் பேச சிறந்த நாள்
மேஷம் : மனதில் மாறுபட்ட யோசனைகள் பிறக்கும். வாழ்க்கையில் அதிரடி முன்னேற்றங்கள் உண்டு. அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். உத்யோகத்தில் வளர்ச்சி இருக்கும்.
ரிஷபம் : எதிர்பார்க்காத அதிஷ்ட வாய்ப்பு தேடி வரும். தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். வெளி உணவுகளை தவிர்க்கவும். தொழில், வியாபாரத்தில் சில இடையுறுகள் இருக்கும்.
மிதுனம் :உற்றார், உறவினர்கள் ஆதரவாக செயல்படுவர். மனக்கவலைகள் நாளடைவில் மறையும். வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.
கடகம் :குடும்ப நபர்கள் சாதகமாக நடந்துகொள்வர். சமயத்திற்கு ஏற்றார் போல வளைந்து கொடுத்து போகவும். கொடுக்கல், வாங்கல் லாபம் அளிக்கும். தொழில், வியாபாரம் சிறக்கும்.
சிம்மம் : குடும்பத்தில் இருந்து வந்த குழப்ப நிலை நீங்கும்.பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். கணவன் மனைவியிடையே அந்யோன்யம் இருக்கும். உத்யோகத்தில் வேலை பளு குறையும்.
கன்னி : புத்தி சாதூரியமும் அறிவு திறனும் அதிகரிக்கும். உறவினர்கள் மத்தியில் இருந்த பகைமை மாறும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. உத்யோகத்தில் மாற்றம் ஏற்படும்.
துலாம் : வெளியிடங்களில் இடம், பொருள், ஏவல் அறிந்து பேசவும். புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம்.எதிர்ப்புகள் அடங்கும். உத்யோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும்.
விருச்சிகம் : குடும்ப பொறுப்புகள் அதிகமாகும். உடல் நலனில் கவனம் தேவை. மற்றவர்கள் மனம் நோகும் படி பேச வேண்டாம். தொழில், வியாபாரம் தொடர்பான பயணங்கள் ஏற்படும்.
தனுசு : எதிலும் கவனத்துடன் செயல்படுவது நல்லது. அடுத்தவர் விவகாரங்களில் தலையிட வேண்டாம். வாகன பராமரிப்பு செலவுகள் கூடும்.
மகரம் : மனதில் புது தெம்பும் உற்சாகமும் தோன்றும். பெற்றோர்கள் நலனில் அக்கறைகொள்ளவும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும்.
கும்பம் : பெரிய தொகை பரிமாற்றிங்களில் கவனம் தேவை. பெற்றோரின் ஒத்துழைப்பு நல்ல விதமாக இருக்கும். காரிய தடை விலகும். தொழில், வியாபாரத்தில் இருந்த மந்த நிலை மாறும்.
மீனம் : குடும்பத்தில் தேவையற்ற சண்டை தவிர்ப்பது நல்லது. உடல் நலம் மேன்மை தரும். மனதில் ஏற்பட்ட பயம் நீங்கும். உத்யோகத்தில் எதிர்ப்புகள் அடங்கும்.