சோபகிருது ஆண்டு – கார்த்திகை 8 – வெள்ளிக்கிழமை (24.11.2023)
நட்சத்திரம் : ரேவதி மாலை 4.18 வரை பின்னர் அஸ்வினி
திதி : துவாதசி மாலை 6.51 வரை பின்னர் திரயோதசி
யோகம் : அமிர்த யோகம்
நல்லநேரம் : காலை : 9.15 – 10.15 / மாலை 4.45 – 5.45
வெள்ளிக்கிழமை சுப ஓரை விவரங்கள்
காலை 6 முதல் 9 வரை, பகல் 1 முதல் 1.30 வரை, 5 முதல் 6 வரை, இரவு 8 முதல் 9 வரை, 10.30 முதல் 11 வரை
சுபகாரியங்கள் : ஆபரணம் அணிய, தொழில் ஆரம்பம் செய்ய, சுபம் பேச சிறந்த நாள்
மேஷம் :சவால்கள், விவாதங்களில் வெற்றி கிடைக்கும். புது நட்பு மலரும். பழைய சிக்கலை தீர்க்க முடியும். உத்யோகத்தில் பாராட்டு மழை உண்டு.
ரிஷபம் :குடும்பத்தில் ஆனந்தம் கூடும். அவசர முடிவுகளை தவிர்க்கவும். உறவினர்கள் சிலர் உதவி கரம் நீட்டுவர். தொழில், வியாபாரத்தில் நிறைய கற்றுக்கொள்ள முடியும்.
மிதுனம் :மற்றவர்களை நம்பி பொறுப்புகளை ஒப்படைக்கக் வேண்டாம். தூர பயணங்கள் அலைச்சலை தரும். காரிய தடை விலகும். தொழில், வியாபாரம் சிறக்கும்.
கடகம் :புதிய செயல்களால் வாழ்வு மேம்படும். பராமரிப்பு செலவு கூடும். உணவு கட்டுப்பாடு அவசியம். தொழில், வியாபாரத்தில் உள்ள சூட்சமங்கள் புரியவரும்.
சிம்மம் :குடும்ப தேவைகள் அதிகரிக்கும். பேச்சில் நிதானம் தேவை. பண விஷயத்தில் கறாராக இருக்கவும். தொழில், வியபாரத்தில் புது முதலீட்டை தவிர்க்கவும்.
கன்னி :குடும்பம் பற்றிய கவலைகள் இருக்கும். யாரையும் பகைத்து கொள்ள வேண்டாம். திட்டமிட்ட செயல் இனிதாக நிறைவேறும். தொழில், வியாபாரம் சிறக்கும்.
துலாம் :குடும்பத்தில் பொறுப்புணர்வு அதிகமாகும். புத்தி சாதூரியமும் அறிவு திறனும் கூடும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். உத்யோகத்தில் நெருக்கடிகள் குறையும்.
விருச்சிகம் :வாக்கு வன்மையால் ஆதாயம் உண்டாகும். தடைப்பட்ட வேலைகள் மீண்டும் தொடங்கும். உறவினர்கள் மத்தியில் இருந்த பகைமை மாறும். உத்யோக மாற்றம் ஏற்படும்.
தனுசு :பண வரவுகள் தாமதப்படும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். நண்பர்களுடன் கருத்து வேறுபாடுகள் வரும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை இருக்கும்.
மகரம் :குடும்பத்தில் பழைய அமைதி மீண்டும் திரும்பும். பேச்சு சாதுரியம் ஏற்படும். நல்ல மனிதர்களின் சிநேகிதம் கிடைக்கும். உத்யோகத்தில் ஆதரவு பெருகும்.
கும்பம் :குடும்பதில் சற்று நிம்மதி குறைந்து காணப்படும். எதிர்ப்புகள் அடங்கும். உடமைகளை கவனமாக பார்த்துக்கொள்ளவும். தொழில், வியபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும்.
மீனம் :குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வார்த்தைகளை அளந்து பேசவும். நம்பிக்கையானவர்களின் நட்பால் ஆதாயம் உண்டு. உத்யோகத்தில் கவனம் தேவை.